அரை நாளில் 43,000 விதைப்பந்துகளை தயாரித்த மாணவர்கள்
1 min read
Students prepared 43,000 seed balls in half a day
18.10.2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா முத்துக்கிருஷ்ணபேரி இந்து உயர்நிலைப் பள்ளியில் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் பிள்ளைகள் ஆர்வமுடன் விதைப்பந்து களை செய்து குவித்தனர்.
அவர்கள் அரை நாளில் 43,000 விதைப்பந்துகளை மாணவ மாணவியர் செய்து விதைப்பந்துகளால் பள்ளியின் பெயரை பிரம்மாண்டமாக எழுதி வடிவமைத்தனர்.
விதைப்பந்து திருவிழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் பீட்டர் சாம் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். ஆசிரியர் சுரேஷ் பிரபாகர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழக மற்றும் கேரள ஹரி பிரியாணி ஹோட்டல்களின் அதிபர் சாம்பவர் வடகரை ஹரிஹர செல்வன் கலந்து கொண்டு பள்ளிக் குழந்தைகளை உற்சாகப்படுத்தினார். விதைப்பந்து பிரச்சாரம் செய்து வரும் சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் விதைப்பந்துகள் தயாரிப்பை ஒருங்கிணைத்தார்.
அனைத்து மாணவ மாணவியர், ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோலிக்காய் அளவிலும், பனம் பழ அளவிலும்வித்தியாசமான விதைப்பந்துகளை ஜாலியாக அனைவரும் செய்தனர். “கொஞ்சம் மாணவர்கள், நிறைய உழைப்பு” என முத்துக்கிருஷ்ணபேரி இந்து பள்ளி விதைப்பந்து தயாரிப்பில் தனித்துவத்துடன் விளங்கியது. ஆசிரியர்கள் தேன்மொழி, செல்வி, அன்னாள், விஜி, ஞானசுந்தரி, சிவ சங்கரி, அருள் நிர்மலா, செசிலியா, ரெஜினா, சிப்ரியா, மகேஸ்வரி ஏற்பாடுகளை கவனித்தனர். ரத்ததான கழக மணியன் மற்றும் அம்பை காந்தி கலந்து கொண்டனர். எட்டாம் வகுப்பு பயிலும் பெபின் அபிஷேக் மற்றும் சந்துரு தங்களது பசுமை நடவடிக்கைகளால் அனைவரையும் கவர்ந்தனர். பூமி பந்து காய்ச்சல் தீர விதைப்பந்து மாத்திரைகளே சிறந்தது என கிராம பள்ளி நிரூபித்தது.