June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஐகோர்ட்டு தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை – கே.பி.முனுசாமி பேட்டி

1 min read

There is no setback due to the ICourt decision – KP Munusamy interview

17.8.2022
ஐகோர்ட்டு தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை என்று கே.பி.முனுசாமி கூறினார்.

தீர்ப்பு

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்தார் அதில், அ.தி.மு.க வின் ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார் கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கே,பி.முனுசாமி கூறியதாவது ; 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்று கொண்டு இருக்கிறார்கள் .பொதுக்குழுவுக்கு எதிரான ஐகோர்ட்டு தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடத்தியதை போலவே இரண்டு பொதுக்குழுக்களும் முறையாக நடத்தப்பட்டது .
இவ்வாறு அவர் கூறினார்

==

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *