புளியரை சோதனை சாவடியில் ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் நேரில் ஆய்வு
1 min read
Collector Ranjeet Singh personally inspects Puliyarai check post
5.6.2026
தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் இன்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் உள்ள தமிழ்நாடு – கேரளா எல்லையில் உள்ள காவல் சோதனைச் சாவடி வழியாக செல்லும் வழித்தடத்தில் கனிமவள வாகனங்களுக்கான ஒற்றைப்படை, இரட்டைப்படை வரிசை முறையாக பின்பற்றி வருகிறதா என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு பணியில் இருந்த வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறை, சுகாதாரத்துறை மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்களிடம் சோதனைச் சாவடியின் நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்டார்.அதற்கு அதிகாரிகள் பதில் அளித்தனர்.