குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதிப்பது எப்போது?- ஆட்சியர் ஆய்வு
1 min read
Collector Ranjeet Singh inspects all waterfall areas in Courtallam
5.6.2026
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கி உள்ள நிலையில் பழைய குற்றாலம், ஐந்தருவி, குற்றாலம் மெயினருவி ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கான வாகனங்கள் நிறுத்தும் இடம், உடைமாற்றும் அறை, கழிப்பறை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குற்றாலத்தில் சீசன் துவங்கிய நிலையில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து வரும் நிலையில் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சஜீத்சிங் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் மற்றும்
சீசன் காலத்தில் வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் வாகனங்கள் நிறுத்தும் இடம், உடைமாற்றும் அறை, கழிப்பறை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சீசன் துவங்கியுள்ள நிலையில் சீசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவியிலும் குளிக்கும் வகையில் மெயின் அருவிப் பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, தென்காசி மாவட்ட சுற்றுலா அலுவலர் நித்திய கல்யாணி, , குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ், குற்றாலம் பேரூராட்சி தலைவர் எம். கணேஷ் தாமோதரன்
திருநெல்வேலி சுற்றுலா அலுவலர் நித்திய கல்யாணி, சுற்றுலாத்துறை உதவி பொறியாளர் விஜில்சிங், குற்றாலம் பேரூராட்சி உதவி பொறியாளர் திருச்செல்வம், லிங்கேஷ்வரி, தொழில் நுட்ப உதவியாளர் மாரியப்பன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.