June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம்: தவெக நிர்வாகி மாயமான நிலையில் பிணமாக மீட்பு

1 min read

Kadayam: Thaweka executive found dead after missing

5.6.2026

தென்காசி மாவட்டம் கடையம் அருகே சொக்கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகன் சக்திவேல் (வயது 37), இவர் தமிழக வெற்றி கழகத்தின் ஆலங்குளம் தொகுதியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய பொறுப்பாளராக இருந்து வந்தார்.
இவர் தெரசா என்பவரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக சக்திவேல் அவரது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
தொடர்ந்து வீடு திரும்ப வில்லை.

இந்நிலையில் இன்று கடையம் அருகே உள்ள மூடப்பட்ட தனியார் குவாரியில் உள்ள தண்ணீரில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஆலங்குளம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கடையம் போலீசார் சடலத்தை மீட்டு சோதனை செய்தபோது நான்கு நாட்களுக்கு முன்பு மாயமான தவெக நிர்வாகி சக்திவேல் உடல் என்பது தெரியவந்தது. மேலும் அவர் இறந்து நான்கு நாட்கள் இருக்கும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சக்திவேல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *