அண்ணாமலை கட்சியின் உறுப்பினர்கள் 7.50 லட்சத்தை கடந்தது
1 min read
Annamalai Party members cross 7.50 lakhs
5.6.2026
அண்ணாமலை அறிவித்துள்ள இயக்கத்தில் முதல்நாளான இன்று (ஜூன் 05) இரவு 7 மணி நிலவரப்படி 7 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் மேல் பதிவு செய்து இணைந்துள்ளனர்.
பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜ தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. புதிய பாதை, புதிய இயக்கம், புதிய பரிமாணத்தோடு, பார்வையோடு ஆரம்பிக்க வேண்டும் என்பது என் ஆசை. தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்த அண்ணாமலை இது நம்ம இயக்கம் (we the leaders) என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார்.
அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடந்து வருகிறது. முதல் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் பதிவு செய்து இணைந்து இருந்தனர். பிறகு இரவு 7 மணி நிலவரப்படி 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேர் பதிவு செய்து இணைந்துள்ளனர்.
ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு, அது தற்போது நிரூபணம் ஆகும் வகையில் அண்ணாமலையில் இயக்கத்தில் இளைஞர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வேகமாக இணைந்து வருகின்றனர்.
அண்ணாமலை விலகலைத் தொடர்ந்து பா.ஜ.க,வில் பல்வேறு மாவட்டங்களிலும் நிர்வாகிகள் வெளியேற துவங்கிவிட்டனர். கரு.நாகராஜன், பா.ஜ.க, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் விஷ்ணுபிரசாத் , சென்னை நிர்வாகி வினோத், ராமநாதபுரம் நிர்வாகி செந்தில்குமார் உட்பட பலர் வெளியேறி உள்ளனர்.