June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

எழுத்தாளர்கள் காளிமுத்து, மீனாட்சிக்கு சாகித்ய அகாடமி விருது

1 min read

Sahitya Akademi Award for Writers Kalimuthu, Meenakshi

25.8.2022
எழுத்தாளர்கள் காளிமுத்து, மீனாட்சிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சாகித்ய அகாடமி

2022ம் ஆண்டுகான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் காளிமுத்துவுக்கு யுவ புரஸ்கார் விருதும், எழுத்தாளர் மீனாட்சிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும் வழங்கப்பட உள்ளன.

2022ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் இன்று (ஆக.,24) அறிவிக்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறந்து விளங்கிய கவிதை, கட்டுரைகள், சிறுகதைகளுக்கான இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், தமிழில் சிறுவர் இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமியின் ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதினை எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு ‘மல்லிகாவின் வீடு’ எனும் சிறுவர், சிறுகதை தொகுப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சாகித்ய அகாடமி வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கான ‘யுவ புரஸ்கார்’ விருதனை ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ எனும் தொகுப்புக்காக ப.காளிமுத்து பெற உள்ளார். இவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் 14-ந தேதி டில்லியில் நடைபெறும் விழாவில் ரூ.50 ஆயிரம் ரொக்கமும், விருதும் வழங்கப்பட உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *