ஆவுடையானூர் புனித அருளப்பர் பள்ளியில்குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழா
1 min read
Anti-Child Labour Day Observance at St. Arulappar School, Avudaiyanur
12.6.2026
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாகி அருட்திரு அந்தோணி குருஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அந்தோணி அருள் பிரதீப் வரவேற்றார்.
திருநெல்வேலி தொழிலாளர் நலத்துறையின் துணை ஆணையர் திருவள்ளுவன் பங்கேற்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் சென்றனர். முன்னதாக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் விஸ்வநாதன், உதவி ஆய்வாளர்கள் மேதா பாஸ்லின், ராமலட்சுமி, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை சாந்தி, என்சிசி அலுவலர் மிக்கேல் அந்தோணி, என்எஸ்எஸ் அலுவலர் தங்கதுரை, சாரணர் இயக்க அலுவலர் ஜஸ்டின், ஜானி, அந்தோணி, பெஸ்டஸ், பிரேம் திவ்யா, தீபா, முத்து இசக்கி உடற்கல்வி ஆசிரியர்கள் வியாகப்பன், அலெக்ஸ் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.