தென்காசி மாவட்டத்தில் ஜூன் ஜமாபந்தி நடைபெற உள்ளது
1 min read
The June Jamabandi is scheduled to take place in Tenkasi district.
12.6.2026
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 19.06.2026, 23.06.2026, 24.06.2026 1435 (2025-2026) ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது.
அதன்படி வரும் 17.06.2026, 18.06.2026, நாட்களில், தென்காசி வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலும், திருவேங்கடம் வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், ஆலங்குளம் வட்டத்தில் தென்காசி சார் ஆட்சியர் தலைமையிலும், சிவகிரி வட்டத்தில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், வீரகேரளம்புதூர் வட்டத்தில் உதவி ஆணையர்(கலால்) தலைமையிலும், செங்கோட்டை வட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) தலைமையிலும், சங்கரன்கோவில் வட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) தலைமையிலும், கடையநல்லூர் வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும் நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று நேரில் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய்த் தீர்வாய அலுவலரிடம் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தார்.