June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தோரணமலை முருகன் கோவிலில் வருண கலச பூஜை

1 min read

Varuna Kalasa Puja at Thoranamalai Murugan Temple

12.6.2026
தோரணமலை முருகன் கோவிலில் வருண கலச பூஜை
நடைபெற்றது.

தென்காசி-கடையம் சாலையில் தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமையன்றும் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை நடைபெறுவது வழக்கம். இம்மாத பூஜை இன்று (வெள்ளி) நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலையில்பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிசேகம், வருண கலச பூஜை, நடைபெற்றது. முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது. சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர்.

காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் சிறப்பாக செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *