கோவில் திருவிழாவிற்காக ஆலங்குளம் வந்தவர் கிணற்றில் மூழ்கி பலி
1 min read
Man who came to Alangulam for temple festival drowns in well.
12.6.2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் சென்னையிலிருந்து கோவில் திருவிழாவிற்காக வந்தவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன் வினோத்(வயது 32). கூலித் தொழிலாளியான இவர் ஆலங்குளம் அருகே குருவன் கோட்டையில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்காக நண்பர்களின் அழைப்பின் பேரில் நேற்று இரவு குருவன்கோட்டை வந்துள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவில் அவரை காணவில்லை என அவரது நண்பர்கள் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் தேடிய போது ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில் வினோத் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.
உடனடியாக ஆலங்குளம் தீயணைப்புதுறை வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் இறந்தது எப்படி என நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வினோத்தின் உறவினர்கள் சென்னையில் இருந்து ஆலங்குளம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.