May 31, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை

1 min read

Chief Secretary’s advice regarding online rummy ban

27.8.2022
ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

ஆன்லைன் ரம்மி

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் விளையாடப்படும் ரம்மி, சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்து இளைஞர்கள் பலர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் பல இடங்களில் அரங்கேறியுள்ளன. இதனை தடுக்கும் விதமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் முதல் அமைச்சரின் தனிச்செயலர் உதயசந்திரன் ,உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி ,டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.