May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை பயமுறுத்திய எலிகள்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Mice that scared Kannayiram/ comedy story/ Tabasukumar

2.9.2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்லும் வழியில் முறுக்கு சாப்பிடுவதற்காக பஸ்சில் மணப்பாறை சென்ற வேளையில் மழை கொட்டியதால் மனைவி பூங்கொடியிடம் குடை வாங்கிக்கொண்டு பஸ்சைவிட்டு இறங்கி னார். குடையைவிரித்தவேளையில் காற்று வீசியதால் குடை கண்ணாயிரம் கையைவிட்டு பறக்க..அதை அங்கு ரோந்துவந்த போலீஸ்காரர் பிடிக்க…அதில் குடை கம்பிகள் வளைந்தன. அந்த போலீஸ்காரரின் விசாரணை வளையத்துக்குள்ளிருந்து வெளியேவந்த கண்ணாயிரம் அவரிடமிருந்து குடையை மீட்ட கண்ணாயிரமாக நின்றபோது கம்பிகள் வளைந்து குடைவிரிக்க முடியாத நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.
குடைகம்பி வளைந்து போனதை மனைவியிடம் சொல்லாமல் மறைத்துவிடவேண்டும் என்று நினைத்தவர் முகத்தில் சிந்திய மழை நீரை தட்டிவிட்டபடி பஸ்நிலையத்திலிருந்த முறுக்கு கடையை நோக்கிவிரைந்தார்.
கடைக்காரர் வியாபாரத்தில் மும்முரமாக இருக்க கண்ணாயிரம் அவரிடம்..பால்முறுக்கு கொடுங்க என்று கேட்டார். கடைக்காரர் அதிர்ச்சியுடன்…என்ன பால் முறுக்கா..என்னைய்யா சொல்லுற என்று கேட்க..கண்ணாயிரம் என்ன முறுக்குரிய மாவை எதிலே பினையிரீங்க சொல்லுங்க என்று கேள்வி எழுப்பினார்.உடனே கடைக்காரர் தண்ணீரிலேதான் மாவை பினைவோம் என்று சொல்ல கண்ணாயிரம் அதிர்ச்சியில் என்ன தண்ணியிலயா..என்னங்க சொல்லுறுங்க…திருச்சி ஓட்டலில் சொல்லும்போது பாலில் மாவை பினைந்து நெய்யிலே சுட்டு முறுக்கை எடுப்பாங்க என்று சொன்னாங்க..நீங்க என்னன்னா தண்ணீய லே பினைவோமுன்னு சொல்லுறீங்க..என்று எகிறினார்.
கடைக்காரர் சிரித்துகொண்டே…நீங்க அதை சொல்லுறீயளா…அது ஸ்பெஷல் முறுக்கு விலை கூட இருக்கும்.அந்த முறுக்குதான் பாலில் பினைந்து நெய்யில் சுட்டு எடுப்போம்..உங்களுக்கு ஸ்பெஷல் முறுக்கு வேணுமா ? ரூபாயை எடுங்க..தர்ரேன் என்றபடி ஸ்பெஷல் முறுக்கு பாக்கெட்டை எடுத்து கொடுத்தார்.
கண்ணாயிரம் நாலு பாக்கெட் கொடுங்க…என்று கேட்டு வாங்கி பணத்தை கொடுத்துவிட்டு டேஸ்டுபார்க்க..எதுவும் தரமாட்டிங்களா என்று கேட்டார். கடைக்காரர் ஒரு துண்டு முறுக்கை எடுத்து கொடுக்க கண்ணாயிரம் அதை சுவைத்தபடி…ஆ..அருமை…அருமை..என்று புகழ்ந்தார்.
சரி..மழை பெஞ்சிக்கிட்டு இருக்க..முறுக்கை நனையாம எப்படி கொண்டுபோவது என்று யோசித்தார். குடையை லேசாவிரிச்சி..அதுக்குள்ளேவச்சி மூடிகொண்டு போயிடவேண்டியதுதான் என்று நினைத்தவர் குடையை கொஞ்சம்விரித்து..அதுக்குள் முறுக்கு பாக்கெட்டை நனையாமல் பத்திரமாக….நடந்து பஸ்சுக்கு வந்தார். அப்பாட..ஒரு முறுக்குவாங்கிறதுக்குள் எவ்வளவு கஷ்டமப்பா..என்று மனைவி பூங்கொடியை நோக்கி நடந்தார்.
ஏன் இவ்வளவு நேரம்..முறுக்கு வாங்கினிங்களா…முறுக்கு சுத்தினியளா..என்று சத்தம்போட்டார். கண்ணாயிரம் மெல்ல..தாமதமாகவந்ததற்கே இப்படி கத்துறா..குடைகம்பி வளைஞ்சிபோயிட்டுன்னு சொன்னா ஆளை உண்டு இல்லைன்னு பண்ணிடுவா..ஜாக்கிரதையா இருக்கணும் என்றபடி முறுக்கு பாக்கெட்டை எடுத்து பூங்கொடியிடம் கொடுத்தார்.
அதைவாங்கிய அவர்..ஏங்க..அந்த குடையை குடுங்க என்று கேட்க..கண்ணாயிரம்…ம்…ஒரே தண்ணியா இருக்கு..சைடிலே வைக்கேன்..காஞ்சபிறகு எடுத்துக்கோ என்றார். பூங்கொடி உடனே..ஏங்க வேற யாரும் தூக்கிட்டுப்போயிடுவாங்க..இங்கே குடுங்க என்று சொல்ல..கண்ணியிரம் ம்..இந்த குடையை போயி யாரும் தூக்குவாங்களா..என்று இழுக்க..பூங்கொடி பதிலுக்கு..என்ன இந்த குடையின்னு இழுக்கிறீங்க..இந்த குடைக்கு என்ன குறைச்சல்..சும்மா ஜம்முன்னு இருக்கும்.கம்பியெல்லாம் ரொம்ப ஸட்டிராங்கு..எந்த காத்தடிச்சாலும் தாங்கும் தெரியுமா என்று புகழ்ந்தார்.
அதை கேட்ட கண்ணாயிரம்..ஆ..ஆமா..கம்பி ஸட்ராங்குதான்..எதுக்கும் குடை காயட்டும்..அப்புறமா எடுத்துக்க..கண்ணாயிரம் குடைன்னா எவனாவது எடுப்பானா..பயம் இருக்காதா என்றபடி இருக்கை அருகே குடையை சாய்த்துவைத்தார்.
பூங்கொடி அதை பார்த்துகொண்டே இருக்க..அவர் கவனத்தை திருப்ப..கண்ணாயிரம் மெல்ல..பூங்கொடி..முறுக்கு பாக்கெட்டை திறந்து சாப்பிடு..இது நெய் முறுக்கு என்றார்.பூங்கொடி சிரித்தபடி…டீக்கடையிலே டீ குடித்துவிட்டு சாப்பிடுவோம்.பத்திரமாவச்சிருக்கேன் என்று பத்திரமாக பைக்குள்வைத்தார்.
கண்ணாயிரம் அப்பாட..குடைகம்பி வளைஞ்சது தெரியல…தப்பிச்சோம் என்றபடி பூங்கொடி அருகே அமர்ந்தார்.அப்போது வாலிபர்களும் மணப்பாறை முறுக்கு பாக்கெட்டைவாங்கிக்கொண்டு பஸ்சில் ஏறிவந்தார்கள். சுடிதார்சுதாவிடம் இரண்டு பார்சலை கொடுத்துவிட்டு…நெல்லைக்கு எப்படி அல்வா பேமசோ..அப்படி மணப்பாறை முறுக்குக்கு பேமஸ்..நெல்லை அல்வா நல்லா இருக்க காரணம் தாமிரபரணி தண்ணீர். அப்படி மணப்பாறை முறுக்கு மொறு மொறுன்னு இருக்க காரணம் இங்குள்ள தண்ணீர். அப்புறம் ஓமம் எள் சீரகம் ஆகியவைகளும் கைபக்குவமும்தான் இதன்சுவைக்கு காரணம். என்று அடுக்கினார்கள்.
அவர்களிடம் இந்த முறுக்கை எப்படி தயார் பண்ணுறாங்க என்று சுடிதார்சுதா கேட்க…அதுவா..அரிசி மாவு உளுந்தம்மாவு சமமா எடுத்து தண்ணீரிலே பினைவாங்க தண்ணீர் உவர்வு சுவை உள்ளது.அது மிக முக்கியம். அப்புறம் எள் சீரகம் ஓமம் போடுறதால தனி மணம்…அதுக்கப்பறம் தரமான எண்ணையிலே..கச்சிதமா இளஞ்சூட்டில் சுட்டு சுட்டு எடுக்கிறாங்க…அதான் மணப்பாறை முறுக்கு சூப்பரா இருக்கு என்று புகழ்ந்தனர்.
சரி..பாலிலே பினைந்து நெய்யிலே சுடுவாங்கன்னு சொன்னாங்களே…அது எப்படி என்று சுடிதார்சுதா கேட்க..அது ஸ்பெஷல் முறுக்கு..விலை கூட…எண்ணையா இருக்கும்..அதை நாங்க வாங்கல என்று சொன்னார்கள்
கண்ணாயிரம் நெய் முறுக்கு வாங்கி இருப்பதால்..நமக்குதான் ஸ்பெஷல் என்று சிரித்தபடி இருந்தார்.
சுடிதார் சுதா மணப்பாறை முறுக்கை ஒன்றை எடுத்து மொறுக்கு மொறுக்கு என்று சாப்பிட்டார். வாலிபர்களும் முறுக்கை ஒரு பிடிபிடித்தார்கள். கண்ணாயிரத்துக்கு நாக்கில் எச்சில் ஊறியது..பூங்கொடி..நாமும் இப்போதைக்கு இரண்டு முறுக்கு சாப்பிடுவமா..என்று கேட்டார்.
பூங்கொடி..சரி..ஆளுக்கு ஒரு முறுக்கு போதும் என்றபடி ஒருபாக்கெட்டை பிரித்து இரண்டு முறுக்கை எடுத்தார். ஒன்றை கண்ணாயிரத்திடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை வாயில்வைத்து முறுக்கை கடித்தபோது அது பதத்துபோய் இருப்பது தெரிந்தது.என்னங்க..ஸ்பெஷல் முறுக்கு எண்ணையா இருக்குமுன்னு சொன்னாங்க..இது தண்ணியிலேவிழுந்தமாதிரி..மொதுக் மொதுக்குன்னு இருக்கு..மொறு மொறுன்னு இல்லையே என்று கேட்டார்.
கண்ணாயிரம் உடனே..பூங்கொடி..முறுக்கு எப்படியிருந்தாலும் வாயிலே போட்டபிறகு..நனைஞ்சு மொதுக் மொதுக்குன்னுதான் ஆகப்போகுது..அதனால அதைபற்றி யோசிக்காத..நெய்வாசம் அடிக்கா..சாப்பிடு என்றார்.
பூங்கொடிக்கு சந்தேகம் வந்ததால்..ஏங்க..முறுக்கை மழையிலே நனைச்சுப்புட்டியளா என்று கேட்க..கண்ணாயிரம் இல்லை…இல்லை..முறுக்குக்கு குடைபிடிச்சிட்டுத்தான் வந்தேன்..நெய் முறுக்கு என்பதால் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும் என்று சமாளித்தார்.
பூங்கொடியும் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் நெய் முறுக்கை சுவைத்து சாப்பிட்டுவிட்டு…தண்ணீர் குடிக்க..கண்ணாயிரம்..அப்பாட…சமாளிக்கிறது பெரும்பாடா இருக்கே என்றபடி முறுக்கை சாப்பிட்டார்.
அடுத்து பயில்வான்வந்து பஸ்சில் ஏறியவுடன்…இனி பஸ் திண்டுக்கல்லில்தான் கொஞ்ச நேரம் நிற்கும்..பாத்ரூம் போறவங்க போகணுமுன்னா போயிட்டு வந்திடுங்க என்றார்.
கண்ணாயிரம் போகலாமா என்று நினைத்தார்.ஆனால்..மழை வேற பெய்து..போலீஸ்காரர் வேற நிப்பாரு..வேண்டாம்..வேண்டாம் திண்டுக்கல் போய்பாத்துக்கிடலாமுன்னு உட்கார்ந்துவிட்டார். ஐந்து நிமிடம் கழித்து மணப்பாறையைவிட்டு பஸ் புறப்பட்டது. மழை தூறிக்கொண்டே இருந்தது. கண்ணாயிரத்துக்கு போரடித்தது. பயில்வான் சார்..டிரைவரகடம் படம்போடசொல்லுங்க…பைசா கொடுத்திருக்கிறோம் இல்லையா..என்றார்.
சரி..சரி..மணி பத்தாச்சு.படம்போட சொல்லுவோம் என்றபடி டிரைவரிடம் போய் சொன்னார்.
அடுத்த நிமிடம் உதவி டிரைவர்..எழுந்து டிவியில் படம்போடும் முயற்சியில் ஈடுபட்டார்.அப்போது டிவிக்குள்ளிரூந்து..கீச்..கீச் என்று கத்தியபடி நான்கு சுண்டெலிகள் துள்ளிக்குதித்து பஸ்சுக்குள் ஓடியது.எல்லோரும் பயந்துபோய் கால்களை மேலே தூக்கிக்கொண்டனர். எலிகள் கண்ணாயிரம் இருக்கைக்கு கீழே இருந்து கத்த…கண்ணாயிரம்..இது என்னடாவம்பா போச்சு..என்று கால்களை தூக்கியவாறு..ச்சோ..ச்சோ..என்று கத்தினார். ஆனால் அது போவதாக இல்லை.கொரானா காலத்திலே பஸ் ஓடாம இருந்தததால..எலிகிலிஎல்லாம் பஸ்சிலே குடியேறிட்டு..இப்பம் என்காலுக்கடியில்வந்து சேட்டை பண்ணுது..என்றபடி மடக்கிவைத்த குடையைவைத்து எலியை விரட்டினார்..ஆனால் அது போகாமல் சத்தமிட கண்ணாயிரத்துக்கு பயம் கொடுத்தது. படம்போடச்சொன்னால் எலிவிரட்டுற வேலையா போச்சே என்றபடி தலையை சொரிந்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.