June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 473 பேருக்கு கொரோனா

1 min read

473 people in Tamil Nadu have corona today

3.9.2022
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று 473 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று 473 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 82 பேர், கோவையில் 61 பேர் உள்பட 35 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் ராமநாதபுரத்தில் பாதிப்பு இல்லை. மருத்துவமனையில் 346 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 34 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *