இந்தியாவில் புதிதாக 5,379 பேருக்கு கொரோனா
1 min read
5,379 new corona cases in India
7.9.2022
இந்தியாவில் ஒரு நாளில் புதிதாக 5,379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவல் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. இன்று முன்தினம் 5 ஆயிரத்து 910 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்று இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 417 ஆக குறைந்திருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 5 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 379 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,44,72,241 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,28,057 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7,094 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,93,590 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 50,594 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 2,13,91,49,934 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,81,319 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய இன்று ஒரே நாளில் 3,21,917 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,80,68,681 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.