இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 6,442 பேருக்கு கொரோனா
1 min read
6,442 new cases of corona in India in one day
15.9.2022
இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 6,442 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 6,442 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,748 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 46,389 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 2.04 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 7 நாட்களில் மட்டும் 37,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
34 பேர் சாவு
கொரோனா பாதிப்பால் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 34 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 250 ஆக உயர்ந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்புகளில் இது 1.19 சதவிகிதமாகும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒருநாளில் மட்டும் 3,109,550 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2,159,816,124- ஆக உயர்ந்துள்ளது.