June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

அக்டோபர் 17-ல் சட்டபேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

1 min read

Assembly session on October 17 – Speaker Appa’s announcement

7.10.2022
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற அக்டோபர் 17-ந்தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற அக்.17-ந்தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படும். அதன்பின், அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் சட்டபேரவை கூட்டம் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும். எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத்தலைவர் கடிதங்கள் பரீசிலனையில் உள்ளது. சபை மரபுப்படி முடிவு எடுக்கப்படும். சட்டப்பேரவை தொடர் விரைவில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும். எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவர் இருவரும் சட்டபேரவையில் கன்னியமாக நடந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *