June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க. தலைவராக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தேர்வு

1 min read

DMK Selection of Chief Minister M.K. Stalin as Chairman

9.10.2022
தி.மு.க. தலைவராக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – கருணாநிதி வழியில் தமிழக உரிமைகளைக் காக்க எந்நாளும் உழைப்பேன் என்று முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தி.மு.க. தலைவர்

திமுக தலைவராக தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
திமுக தலைவராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இனமானமும் சுயமரியாதையும் காக்கும் அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்புக்கு இரண்டாம் முறையாக என்னைத் தேர்ந்தெடுத்த உடன்பிறப்புகள் அனைவர்க்கும் நன்றி! தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தமிழக உரிமைகளைக் காக்க எந்நாளும் உழைப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *