June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

1 min read

Firecrackers restricted for Diwali in Tamil Nadu

10.10.2022
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க, காலை 6-7 மணி வரையும், இரவு 7 – 8 மணி வரையும் மட்டுமே மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து, மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  • தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7 – 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்.
  • குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுக்களை மட்டுமே வெடிக்க வேண்டும்.
  • மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *