காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியா காந்தி-பிரியங்கா காந்தி வாக்களித்தனர்
1 min read
Congress President Election: Sonia Gandhi-Priyanka Gandhi voted
17.10.2022
டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்களித்தனர்.
காங். தலைவர் தேர்தல்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை. 24 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குடும்பத்தைச் சேராத ஒருவர் இப்போது தேர்தல் மூலம் தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப்போகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வாக்களித்தனர்.
ராகுல்காநதி கர்நாடகாவி்ல் இருந்து வாக்கு போட்டார்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குபதிவு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொடங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் தனது வாக்கினை செலுத்தினார் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 211 கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கார்கே அல்லது சசி தரூர் என்ற இருவரில் யார் அடுத்த தலைவர் என்ற போட்டிக்கான வாக்கு பதிவு நிறைவடைந்து உள்ளது. அக்டோபர் 19-ந்தேதி (நாளை மறுநாள்) வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றவர் யாரென்ற முடிவுகள் அறிவிக்கப்படும்.