June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த யோகா ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை

1 min read

Yoga teacher gets life imprisonment for sexually harassing girl

17.10.2022
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த யோகா ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பாலியல் தொந்தரவு

சென்னை சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஜேம்ஸ் மரிய ஞானராஜ். கடந்த 2015-ம் ஆண்டு இவர், அதே பள்ளியில் படித்து வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ் மரிய ஞானராஜை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ கோர்ட்டு நீதிபதி எம்.ராஜலட்சுமி, ஜேம்ஸ் மரிய ஞானராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *