May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடி நவ.11-ம் தேதி தமிழகம் வருகிறார்

1 min read

Prime Minister Modi is coming to Tamil Nadu on November 11

27.10.2022
பிரதமர் மோடி காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நவ.11-ம் தேதி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை 4 வழிச்சாலையில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி 35-வது பட்டமளிப்பு விழா நடந்தது. அந்த விழாவில் அப்போதைய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாந்த் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
அதன் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 3 ஆண்டுகளாக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா நவம்பர் 11-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.