May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் கேட்ட இதயகுளுமை/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram asked for a heart-warming drink/ Comedy Story/ Tabasukumar

1.11.2022
கண்ணாயிரம் குற்றாலத்துக்கு சுற்றுலா செல்லும் வழியில் மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையத்துக்கு வந்தார்.பின்னர் மல்லிகைபூ வாங்கவும் ஜிகர்தண்டா சாப்பிடவும் மதுரை பெரியார் பஸ்நிலையம் செல்ல விரும்பினார். சுடிதார் சுதா ஆதரவு இளைஞர்களும் அதை ஆதரித்ததால்பஸ் பெரியார் பஸ்நிலலயம் நோக்கி சென்றது. வழியில் போலீசார் மறிக்க கண்ணாயிரம் மல்லிகைபூ வாங்கணுமுன்னு அரைகுறையாக சொல்ல கண்ணாயிரம் போலீஸ் இன்பார்மர் என்று புதுவை போலீசார் சொல்ல மதுரை போலீஸ்காரர் கண்ணாயிரம் சுற்றுலா பஸ்செல்ல வழிவிட பஸ்பெரியார் பஸ்நிலையம் விரைந்தது. கண்ணாயிரத்தின் போலீஸ்செல்வாக்கை கண்டு அதிசயித்த பயணிகள் அவருக்குவந்து கைகொடுத்துவிட்டு சென்றார்கள். சுடிதார்சுதா கைகொடுக்க வந்தபோது கண்ணாயிரம் கைகூப்பி வணக்கம் என்று சொல்லிவிட்டு பதுங்கிக்கொண்டார்.
நாம ஏதோ செய்தோம் அது ஏதோ நடக்குது ..ஒண்ணுமே புரியலையே என்று கண்ணாயிரம் நினைத்தார். கண்ணாயிரம் பதுங்குவதைப் பார்த்து சுடிதார்சுதா சிரித்தபடி வணக்கம் செலுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். பஸ் வேகமாக பெரியார் பஸ்நிலையம் நெருங்கியபோது..அங்கே போ..அங்கே..போ என்று போலீஸ்காரர் ஒருவழியைக் காட்டினார். அங்கே சென்று டிரைவர் பஸ்சை நிறுத்தினார். உடனே எல்லோரும் ஆவலாக…பஸ்சைவிட்டு இறங்கி ஜிகர்தண்டா கடை எங்கே இருக்கு என்று தேடி ஓடினார்கள். மழை சற்று நின்றிருந்தது. கண்ணாயிரம் மெல்ல எழுந்தார்.
முதலில் இந்த மல்லிகை பூவை வாங்கணும்…பிறகு வித்துபோயிடக்கூடாது.. சிக்கலாகிடும். பூ வாங்கிகொடுத்தாதான் பூங்கொடியை சமாளிக்க முடியும் என்றவாறு நடந்தார்.
அதை பார்த்த பூங்கொடி…ஏங்க கொஞ்சம் நில்லுங்க…இந்த குடையை தூக்கிட்டுப்போங்க…என்று பழைய குடையை காட்டினார். ஓட்டை விழுந்த குடையை தூக்கிச்செல்ல கண்ணாயிரத்துக்கு விருப்பம் இல்லை. ஆனால் அவர் அதைக் காட்டிக்கொள்ளாமல் மழைதான் பெய்யலையே..பிறகு எதுக்கு குடை என்று இழுத்தார்.: பூங்கொடி கோபமாக..பழைய குடைன்னு நினைக்கிறீயளா…பழசை என்னைக்கும் மறக்கக்கூடாது…புரியுதா .திடிரென்று மழைவந்தா என்ன பண்ணுவீங்க.. மழை பெஞ்சா உங்க உடம்புக்கு ஆகாது..குடையை எடுத்துட்டு போங்க என்க கண்ணாயிரம்..அட..இதுவேற தொல்லையா போச்சே .குடை எடுத்துட்டுப் போகலன்னா விடமாட்டாபோலிருக்கே என்றவாறு தலையை சொரிந்தபடி நின்றார்.
பூங்கொடி பழைய குடையை எடுத்து கண்ணாயிரத்திடம் கொடுத்து.. இப்ப குடைபிடிச்சி ஜம்முன்னு போனீங்கன்னா எல்லோரும் உங்களுக்கு வணக்கம் போடுவாங்க போங்க என்க கண்ணாயிரம்வேறு வழியில்லாமல் பழையை குடையை கையில் வாங்கிக்கொண்டு பஸ்சைவிட்டு இறங்கினார்.
மழை பெய்யல..இப்ப குடைபிடிச்சா சிரிக்க மாட்டாங்களா…குடைபிடிக்கவா வேண்டாமா என்று யோசித்தபடி நடந்தார்.
பூங்கொடி பஸ்சில் இருந்தபடி ஏங்க குடைபிடித்தபடி போங்க என்று கத்த கண்ணாயிரம் பயந்துபோய் குடையை மெதுவாகவிரித்து பிடித்தார். நடந்தார். அவர்குடைபிடித்து செல்லும் அழகை ரசித்த வெள்ளைக்காரர் சிரித்தபடி..பியூட்டிபுள்..வோல்ட் அம்பரலா….வெரி ரேர்வேரிரேர் என்று பாராட்டி கைகுலுக்கினார்.
அதைப் பார்த்த பலரும் வெள்ளைக்காரர் பாராட்டும் அளவுக்கு கண்ணாயிரம் குடையில் ஏதோ விசயம் இருக்கு..குடையிலே பல இடங்களில் ஓட்டை இருக்கு..இது ரேர் குடையா..என்று சிரித்தனர்.
கண்ணாயிரம் அருகில் வந்து இதை எங்கே வாங்கினீங்க…வெள்ளைக்காரரே பாராட்டுறாரு..உங்க குடையிலே அந்த ஓட்டை புதுடிசைனா இருக்கு..எந்த ஊருல இது கிடைக்கும் என்று கேட்க கண்ணாயிரம் பதில் சொல்லவில்லை.
சரி..அதிசய குடைன்னா அப்படித்தான் இடத்தை சொல்லமாட்டாங்க…விருப்பம் இருந்தா சொல்லூங்க..வெள்ளைக்காரர் உங்கக்கிட்ட என்ன சொன்னார் என்று கேட்டனர்.
கண்ணாயிரமோ…அதுவா ரகசியம்..யாருக்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு…அதை கேட்காதீங்க என்று சும்மா ஒரு பிட்டைப்போட்டுவிட்டார்.
வெள்ளைக்காரர் என்னசொன்னாருன்னு பூரிஞ்சாதானே சொல்லமுடியும்…இவங்களுக்கு அது புரியமாட்டேங்குதே என்றவர் நடக்கத் தொடங்கினார். அவர்பின்னால் சென்றவர்கள்..வணக்கம் சார்..அந்த குடை எங்கே கிடைக்குமுன்னு கொஞ்சம் சொல்வீங்களா என்று கேட்டனர். கண்ணாயிரம் வெட்கத்துடன் அடபோங்கப்பா…கேலிபண்ணுறீங்களா…பாராட்டிரீங்களான்னு தெரியல…ஆளைவகடுங்கப்பா..என்றவாறு வேகமாக ஓடினார்.
ஆமா..இந்த பூ விற்கிற இடம் எங்கே…வேகமாக ஓடிவந்ததில் ரொம்ப தூரம் ஓடிவந்திட்டேன் போலிருக்கு என்று நினைத்தவர் அந்தவழியாக வந்த ஒரு பெண்ணிடம்..ஏங்க..பூ..பூ..என்று வார்த்தைவராமல் திணற அந்த பெண் முறைத்துவிட்டு சென்றனர். ம்..அவசரத்துக்கு நினைவுக்கு வராது…ஆ.மதுரை மல்லி மதுரை மல்லி என்று கூவ…ஒரு பெண் ஏங்க ஒரு முழம் கொடுங்க என்க..கண்ணாயிரம் கடுப்பாகி..ஏம்மா..அந்த மதுரை மல்லியைத்தேடித்தான் நான் கத்துறேன்..நான் விக்கிறேன்னு நினைச்சியா என்று கண்ணாயிரம் சிரித்தபோது கூடையில் மதுரை மல்லியுடன் ஒரு இளம்பெண் நடந்துவந்தார்.
மதுரை மல்லின்னு அந்த பெண் குரல் கொடுத்ததும் கண்ணாயிரம் ஓடிப்போய் எனக்கு இரண்டு முழம் என்று கையை நீட்டினார். அந்த பெண் முழம்போட்டு மல்லிகை பூவை அளவிட்டு கண்ணாயிரத்திடம் கொடுத்தார். ரூபாயை கொடுத்துவிட்டு சில்லறை பெற்ற கண்ணாயிரம்..அட..இங்கே விலையும் கம்மியா இருக்க..வாசமும் தூக்கலா இருக்கு என்று புகழ்ந்தபடி பஸ்சை நோக்கி நடந்தார்.
முதலில் பூங்கொடிக்கிட்ட இந்த பூவை கொடுத்திடணூம்..அப்புறம்தான் இந்த அடிதண்டா..ச்சே…யாருக்கிட்டே போயி கேட்பேன் ..மறந்து மறந்து போவுது…என்றபடி பஸ்சில் குடையை மடக்கியபடி ஏறினார்.
கோபத்தில் இருந்த பூங்கொடியிடம்…ஐ..பூவு.. என்று சிரித்தபடி கொடுத்தார். பூங்கொடியும் கோபம் தணிந்து வாங்கி தலலயில் சூடினார். கண்ணாயிரம் புன்னகையுடன் மல்லிகைபூ கிடைத்த கதையை கூற பூங்கொடியோ எல்லாம் இந்த பழைய குடையின் மகிமைங்க.. இதை நீங்க எங்கேபிடிச்சிட்டுப்போனாலூம் உங்களுக்கு காரியம் வெற்றி ஆகும் என்றார்.
கண்ணாயிரம் இந்த குடையைவிட்டுட்டு போகலாமுன்னு நினைச்சா..ராசி குடைன்னு சொல்லுறாளேன்னு என்று விழிபிதுங்கி நின்றார்.
பூங்கொடியிடம் இந்த அடிதண்டாவா..பிடிதண்டாவா…ஏதோ சொன்னாங்களே…நீசொல்லு என்று கண்ணாயிரம் கேட்க..எனக்கு தெரியலங்க…கீழே யாருக்கிட்டேயும் கேளுங்க..குடைபிடிச்சகட்டு போங்க..வெற்றி நமதே என்றார்.
கண்ணாயிரம் சோகத்தூடன் குடையுடன் பஸ்சைவிட்டு இறங்கினார். குடைபிடித்தாத்தான் ராசி என்று மனைவி சொன்னதால் குடையை விரித்தபடி நடந்தார்.
ஜிகர்தண்டா சாப்பிட்டுவிட்டு என்னடேஸ்டு..என்ன டேஸ்டு..ச்சா. .சூப்பர் என்று நாக்கை சுழற்றியபடி பயணிகள் பஸ்சை நோக்கி நடந்துவந்தனர். கண்ணாயிரம் அவர்களிடம்..கடை எங்கே இருக்கு..நீங்க சாப்பிட்டு வர்ரீங்களே அந்த கடைதான்..என்று கேட்க அவர்கள் தூரத்தில் உள்ள கடையை கைகாட்டினார்கள்.
கண்ணாயிரம்..அப்பாட இடத்தை கண்டுபிடிச்சாச்சி என்றபடி வேகமாக அந்த கடையை நோக்கி நடந்தார். அங்கு சுடிதார்சுதா சேரில் அமர்ந்து ஜிகர்தண்டாவை ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அதைப்பார்த்ததும் கண்ணாயிரத்துக்கு நாவில் எச்சில் ஊறியது. ஆ..அது என்ன பெயரூன்னு சுடிதார்சுதாவிடம் கேட்கலாமா என்று நினைத்த கண்ணாயிரம்..ஆ..வேண்டாம். பிறகு நான்தான் அதுவாங்கிக் கொடுத்தேன்னு பூங்கொடிக்கிட்ட சொல்வா..அது சிக்கலாகிடும்..நம்மளே முயற்சிபண்ணிக்கேட்போம் என்று நினைத்தவர் கடைக்காரரிடம்..ஏங்க அந்த அடிதண்டா…கொடுங்க என்று கேட்க கடைக்காரர் கோபமாகி..ஏங்க..ஆடிதண்டாவா..அதை இரும்பு கடையிலேபோயி கேளுங்க என்று விரட்டினார்.
என்னடா வம்பா போச்சு..இதுக்கு தமிழில் என்னன்னு சுடிதார் சுதா சொல்லிச்சே…அது என்னது..இதய..அப்புறம் குளுமை..ஆ..நினைவு வந்துட்டு..இனி கடைக்காரன் நம்மக்கிட்ட தப்பமுடியாது என்று நினைத்த கண்ணாயிரம் கடைக்காரரிடம் ஏங்க..இந்த விரட்டுற வேலையெல்லாம் வச்சிடக்கூடாது…ஒரு இதய குளுமை கொடுங்க என்றார்.
கடைக்காரர் அது புரியாமல்..ஏய்யா காலையிலேவந்து கழுத்தை அறுக்கிற..வேற கடையிலேபோயி கேளுன்னு விரட்டினார்.
கண்ணாயிரம் நெஞ்சை நிமிர்த்தினார். ஏங்க இந்தி பெயரிலே ஏதோ விக்கிறீய..அதை சுத்த தமிழிலிலே கேட்டாலும் அது புரியமாட்டேங்குதுன்னு சொல்லுறீங்க..சொந்த நாட்டில் தமிழுக்கு இடமில்லையா என்று குரல் எழுப்பினார்.
அதைக்கேட்ட கடைக்காரர் ஏங்கே..சாதாரண விசயத்தை தேசிய பிரச்சினையாக்கிடாதீங்க..உங்களுக்கு என்ன வேணும் என்று கெஞ்ச கண்ணாயிரம் மெல்ல சுடிதார்சுதாவை காட்டி..அவங்க சாப்பிடுறது வேணும் என்றார்.
கடைக்காரருக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏங்க அவங்க சாப்பிடுறதை வாங்கித்தர முடியாது என்று சொல்ல கண்ணாயிரம் முகம்வாடினார்.
அதைப் பார்த்த சுடிதார்சுதா மெல்ல கடைக்காரரிடம்..ஏங்க..அவர் ஜிகர்தண்டா கேட்கிறாரு..இந்தி அவருக்கு வாயில நுழையாது என்றார். கடைக்காரர் சிரித்தபடி இதைத்தான் இதயகுளுமைன்னு சொல்லுறாரா..பரவாயில்லையே..அவருக்கு இதயகுளுமையையே கொடுக்கிறேன் என்றார்.
கண்ணாயிரயம் சிரித்தபடி..அதான்..இதயகுளுமை கொடுங்க என்றார்.
கடைக்காரர் ஒரு கண்ணாடி கிளாசில் இதயகுளுமையை எடுத்து கொடுத்தார். கண்ணாயிரம் ஒரு சேரில் அமர்ந்து ஒருகரண்டியில் எடுத்துவாயில் போட்டவர் ஆ…என்று கத்தினார்.(தொடரும்)
வே.தபசுக்குமார், புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.