கல்வி பொதுபட்டியலுக்கு சென்றது எப்போது? மீண்டும் மாநில பட்டியலுக்கு வருமா?
1 min readWhen did education go public? Will it return to the state list?
13.11.2022
கல்வி என்பது தற்போது பொதுபட்டியலில் உள்ளது. ஒருகாலத்தில் மாநலபட்டியலில் இருந்த இந்த கல்வி 1976ம் ஆண்டு பொதுபட்டியலுக்கு மாற்றப்பட்டது. இப்போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கல்வி மாநில பட்டியலுக்கு வரவேண்டும் என்று பிரதமரிடம் முதல் அமைசசர் மு.க,ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல், காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். அதே விழவில் முதல்அசைச்சர் கலந்து கொண்டுபேசினார். அப்போது தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்துக் கூறியதோடு தமிழ்நாட்டின் கல்வி வளம் பற்றியும் பேசினார்.
மு.க.ஸ்டாலின் பேசுகையில், கல்வி என்பது அனைவரது வாழ்விலும் முக்கியமான ஒன்று எனவும் கல்வியாலேயே நாடு முன்னேறும் எனவும் கூறினார். அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் போது கல்வி மாநில பட்டியலிலேயே வைக்கப்பட்டிருந்தது எனவும் தற்போது அது பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார் அவசர காலங்களில் மட்டுமே கல்வி பொதுப்பட்டியலில் வைக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த முதல் அமைச்சர் கல்வி முன்னேற மாநிலத்தின் ஒத்துழைப்பே மிக அவசியம் எனவும் அதனால் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கை சாதாரணமானது அல்ல. கல்வி மாநில பட்டியலில் இருந்தபோது தமிழ்நாடு கல்வியில் எண்ணற்ற வளர்ச்சியை கண்டது. அந்த வளர்ச்சி மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. முக்கியமாக மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு ஒன்றிய அரசு அதிகாரங்களை கையில் எடுத்துக் கொண்டது. 1976 மொத்தம் 5 முக்கியமான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
மாநில அரசுகளின் அனுமதி இன்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல் எமர்ஜென்சி காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இப்படி கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே தற்போது நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக்கொள்கை போன்ற சட்டங்கள் ஒன்றிய அரசு மூலம் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில்தான் 46 வருடங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட இந்த மாற்றத்திற்கு எதிராக கடந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன் சார்பாக அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக இந்த மனுதாக்கல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த அமைப்பில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிடி செல்வன், அக்பர் அலி, மூத்த பத்திரிக்கையாளர் ஏஎஸ் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான விதிமீறல், அரசியலமைப்பு விதிகளுக்கு எதிராக, வரம்பு மீறி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கல்வியை பொதுபட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான விதிமீறல், அரசியலமைப்பு விதிகளுக்கு எதிராக, வரம்பு மீறி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பிரபல கேசவாநந்த பாரதி வழக்கை சுட்டிக்காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, அரசியல் சட்ட பிரச்சினை தொடர்பான இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.அதன்படி, நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில்தான் இப்போது முதல்அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்பி என்பது மாநில பட்டியலுக்கு வர வேண்டும் என்பது நல்ல கருத்துதான். தமிழருவி மணியன்கூட கல்வி பொது பட்டியிலில் இருக்க கூடாது என்று கூறினார். அதோடு அது இந்திரா காந்தியால் மிசா காலத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது இதுபற்றி வினா எழுப்ப முடியவில்லை என்றாலும் பின்னாளில் கருணாநிதி கூட மாநில பட்டியலுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு இருக்கலாம் என்றும் தமிழருவி மணியன் கூறியிருந்தார்.
காலம் கடந்தாலும் இபபோது மு.க.ஸ்டாலின் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
,இது நிறைவேறுமா என்பது சந்தேகம். காரணம்…. தற்போது பாரதீய ஜனதா தேசிய கல்விக் கொள்கையை முன்நிறுத்தும் நிலையில் இதற்கு செவி சாய்க்குமா என்பது கேள்விக்குறிதான்.
ஆனால் கல்வி என்பது மாநில பட்டியலில் இருந்தால்தான் மாநிலங்களிடையே போட்டிப்போட்டு கல்வியின் தரத்தை உயர்த்துவார்கள். தமிழ்நாடும் கல்வியில் மேன்மை காணும். தேசிய கல்வி கொள்கை வந்தாலும் கல்வி என்பது மாநில பட்டியலில் இருந்தால் நல்லது என்றே தோன்றுகிறது- நீதிமன்றம் என்ன சொல்கிறது. என்றும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்