May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

நர்சை திணறவைத்த கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram that choked the nurse/ comedy story/ Tabasukumar

14/11/2022
கண்ணாயிரம் குற்றாலத்துக்கு சுற்றுலாசெல்லும் வழியில் மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே சென்றார். ஜிகர் தண்டா கடைக்குசென்று ஜிகர்தண்டா குடித்துவிட்டு மனைவிக்கு ஓரு ஜிகர்தண்டா வாங்கிவரும்போது குடையை மறந்துவிட்டுவர மீண்டும் அந்த கடைக்குச்சென்று கொட்டும்மழையில் நனைந்தபடி குடையை மீட்டு பஸ்சுக்கு ஓடிவந்தார். கொட்டும் மழையில் நனைந்தது மற்றும் ஜிகர்தண்டாசாப்பிட்டது ஆகியவற்றால் கண்ணாயித்துக்கு தொண்டைகட்டியது. பேசமுடியாமல் அவர் அவதிப்பட்டதால் பஸ் நெல்லைக்கு செல்லும் வழியில் திருமங்கலத்தில் நிற்க அங்குள்ள கிளினிக்கிற்கு கண்ணாயிரத்தை அவரது மனைவி பூங்கொடி அழைத்துச்சென்று டாக்டரிடம் காட்ட அவர் மருந்துமாத்திரை எழுதிகொடுத்துவிட்டு ஊசிபோட்டுக்கொண்டு செல்லும்படி கூற நர்சு இருந்த அறைக்கு கண்ணாயிரம் சென்றார்.
கண்ணாயிரத்துக்கு ஊசி என்றால் பயம் என்ற நிலையில் நர்ஸ்பெரிய ஊசியுடன் வந்ததைப்பார்த்து அலறிஅடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார். அவரை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மடக்கிபிடித்து அலாக்காக தூக்கிச் செல்ல பூங்கொடியும்..விடாதீங்க…நல்ல ஊசியா போடுங்க என்று கூறியபடி உடன்சென்றார்.
கண்ணாயிரம் மனைவியை பார்த்து மவுனமாக திட்ட ஊழியர்கள் அவரை சேரில் உட்காரவைத்து பிடித்துக்கொண்டனர். பூங்கொடி மெல்ல கண்ணாயிரத்திடம் ஒண்ணும் பயப்படாதீங்க…வலிக்காம குத்துவாங்க..சரியா..முன்னால நாய் கடிச்சபோதும் இப்படிதான் ஊசிபோடமாட்டேன்னு அடம்பிடிச்சிங்க..டாக்டர் வலிக்காம ஊசிபோட்டாருல்ல…நாய்மாதிரி கத்தாம தப்பிச்சிங்கல்ல…அதை மாதிரி இப்பவும் பொறுத்துக்குங்க..அப்பதான் உங்களுக்கு பேச்சுவரும் சரியா என்று கண்ணாயிரத்தை பூங்கொடி சமாதானம் செய்தார்.
கண்ணாயிரமும் உடனே வலிக்காம ஊசி குத்தணும் சரியா என்று நிபந்தனைவிதிக்க…சரி சரி..என்று பூங்கொடி தலையை ஆட்டினார்.
நர்ஸ் அருகில்வந்து கண்ணாயிரம் அங்கே பாருங்க உங்க சோந்தக்காரங்களா பாருங்க என்று சொல்ல கண்ணாயிரம் வேகமாக நர்ஸ்காட்டிய திசையைப் பார்த்தார். அந்த நேரத்தில் நர்ஸ்வேகமாக கண்ணாயிரத்தின் கையில் ஊசியை குத்தப்போக கண்ணாயிரம் அங்கே சொந்தகாரங்க யாருமே இல்லையே என்று நர்சை நோக்கி வேகமாக திரும்ப ..கண்ணாயிரத்தை குறிவைத்த ஊசி தவறுதலாக கண்ணாயிரத்தை பிடித்திருந்த ஊழியரின் கையில்பாய…அவர் அலறமுடியாமல் தவிக்க..கண்ணாயிரம் நர்சைபார்த்து ஊசிபோட்டாச்சா என்று கேட்க நர்ஸ் கோபத்தில் போட்டாச்சு என்று சொல்ல..தேங்ஸ்..வலியில்லாமல் ஊசிபோட்டிட்டிங்க…வரட்டுமா என்றார்.
ஊசிப்போடப்பட்ட ஊழியர் துடித்தபடி..உங்களுக்கு எப்படி வவலிக்கும்..ஊசிபோட்டது எனக்குல்லா…ஏய்யா திடிரென்று திரும்பின..இன்னைக்கு உம்மைவிடுறமாதிரி இல்லை என்று கண்ணாயிரத்தை பாய்ந்து அமுக்கினார்கள்.அவர்..ஆ..ஊ..என்று கத்தினார். அப்போது இன்னொரு நர்ஸ் லாலிபாப் மிட்டாயை அவர் முன் நீட்டினார். அதை பார்த்து கண்ணாயிரம் வாயை நிலையில் அவரது பின்பக்கத்தில் நர்ஸ் ஊசியை குத்தினார். கண்ணாயிரம் துடித்துபோனார்.
எப்படி கையிலே குத்தாம பின்பக்கத்திலே ஊசியை குத்தலாம் என்று சத்தம்வராமல் ஆ..என்று சைகையால் கேட்க அவர் குரல் எடுபடவில்லை. பூங்கொடி கையில் நர்ஸ் பஞ்சை கொடுத்து ரத்தம்வந்தால் பஞ்சால் அழுத்துங்கள் என்றார்.
கண்ணாயிரம் குரல்வேறு வராததால் சுற்றி சுற்றிவந்தார்.ஊசி குத்திய வேகத்தில் ஆச். ஆச்..ஆச்..என்று தும்மினார். அதைபார்த்த நர்ஸ் உடனே முககவசம் மாட்டுங்க..என்று எச்சரித்தார். கண்ணாயிரம் முக கவசம் இல்லை என்று சொல்ல மெடிக்கல் ஷாப்பில் வாங்கிக்கிங்க என்று சொல்ல கண்ணாயிரம் அப்பாட வலிக்குதே என்று இடுப்பை ஒருபக்கம் சாய்த்தப்படி நடந்தார்.

பூங்கொடி கிளினிக்கில் பணத்தை கட்டிவிட்டு மருந்து மாத்திரைவாங்க கிளினிக் அருகே உள்ள மெடிக்கலுக்கு செல்ல கண்ணாயிரம் அம்மா…அப்பா என்றபடி பின்னால் சென்றார். மெடிக்கல் சென்றதும் கண்ணாயிரம் தும்மல்போட..ஏய்யா முககவசம் போடலைய்யா..என்று கடைக்காரர் கேட்க கண்ணாயிரம் இல்லை என்று தலையை ஆட்டினார். என்ன என்று கடைக்காரர் விசாரிக்க பூங்கொடி தாங்கள் குற்றாலம் டூர் செல்வதை சொல்ல அவர் ஒருபாக்கெட் முககவசம் வாங்கிக்கிங்க…ஒருநாளைக்கு ஒண்ணு பயன்படுத்துங்க..உங்க தொற்று உங்களுக்குவராது மத்தவங்க தொற்று உங்களுக்குவராது என்றார்.
பூங்கொடியும் சரி என்று சொல்ல மெடிக்கல் ஸ்டோர்காரர் மருந்து மாத்திரை மற்றும் ஒரு பாக்கெட் முககவசமும் கொடுத்தார். கண்ணாயிரத்துக்கு இலவசமாக ஒரு முககவசத்தை மாட்டிவிட்டார். உடனே கண்ணாயிரம் அவரிடம் எங்க பஸ்சிலே நாப்பது பேரு இருக்காங்க..அவங்களுக்கும் முககவம் வேண்டும் என்று கேட்டார்.
பூங்கொடியோ..ஏங்க..ஆவங்களுக்கு வேணுமுன்னா..அவங்கவாங்கிக்குவாங்க..நீங்க போயி இந்த முககவச பாக்கெட்டை பஸ்சிலே வச்சிட்டு வெந்நீ வாங்க பிளாஸ்கை எடுத்துட்டுவாங்க என்றார் பூங்கொடி.
உடனே கண்ணாயிரம் முககவசம் மாட்டியபடி முககவச பாக்கெட்டுடன் தள்ளாடி தள்ளாடி பஸ்சில் சென்று ஏறினார். கண்ணாயிரம் முககவசத்துடன் ஏறுவதைப்பார்த்த சுடிதார்சுதா..என்ன ஆச்சு என்று கேட்க..கண்ணாயிரம் முககவசத்தை மெல்ல தூக்கி..ஆச்..ஆச் என்று தும்மல் போட்டுவிட்டு மீண்டும் முககவசத்தை மாட்டிக்கொண்டார்.
தனது இருக்கை அருகே முககவச பாக்கெட்டை வைத்துவிட்டு பிளாஸ்கை எடுத்துக்கொண்டு பஸ்சைவிட்டு இறங்கினார்.
இதைப் பார்த்த வாலிபர்கள்..என்ன கண்ணாயிரம் திடீரென்று முககவசம் மாட்டியிருக்காரு..ஏதாவது தொற்றாக இருக்குமோ?…நமக்கும் பரவாமல் இருக்க நம்மளும் முககவசம் அணிவோம் என்று சுடிதார்சுதாவிடம் கூறினார்கள். சுடிதார்சுதாவும் தலையை அசைக்க வாலிபர் ஒருவர் பஸ்சைவிட்டு இறங்கி முககவசம்வாங்கச் சென்றார்.

கண்ணாயிரம் இடுப்பை ஒருமாதிரி அசைத்தபடி பிளாஸ்குடன் பூங்கொடியை தேடினார். அங்குள்ள டீக்கடை அருகே நின்ற பூங்கொடியைப் பார்த்து அங்கே சென்றார். டீக்கடையில் நல்ல கூட்டம்..வெந்நீ…வெந்நீ என்று கண்ணாயிரம் குரல் கொடுக்க யாரும் கண்டுகொள்ளவில்லை.

சூடா ஒரு டீ கேட்போம் என்று நினைத்தவர் டீ..டீ என்க..டீக்கடை ஊழியர் டோக்கன்..டோக்கன் என்று சொல்ல கண்ணாயிரம் மெல்ல இந்த பிளாஸ்கிலே வெந்நி கொடுங்க…டீக்கு டோக்கன் வாங்கிவர்ரேன் என்று பிளாஸ்கை கொடுத்தார். கடை ஊழியர் அதைவாங்கி வைத்துவிட்டு டீபோடுவதில் விறுவிறுப்பானார்.
கண்ணாயிரம் டோக்கன்வாங்கிட்டுவந்து கடை ஊழியரிடம் கொடுக்க அவர் கண்ணாடி கிளாசில் டீ கொடுத்தார். கண்ணாயிரம் வாங்கிகுடித்தார். பிளாஸ்கில் வெந்நீர் ஊற்றிக்கொடுக்க கடை ஊழியருக்கு கண்ணாயிரம் தேங்ஸ் என்றார்.
பூங்கொடி ஆச்சரியமாக பார்த்தார். ஏங்க..நீங்க பேசுறீங்க…கொஞ்சம் பேசுறீங்க..எல்லாம் ஊசி செய்யுற வேலை..என்று ஆச்சரியத்துடன் சொல்ல கண்ணாயிரம் ஆமா…பின்பக்கமா வேகமா ஊசி குத்துனா..வாய்திறக்காம என்னசெய்யும் அப்பா வெந்நி ஒத்தடம் கொடுக்கணும்..அப்பதான் சரியாகும் என்றார்.
சரி முக கவசத்தை மாட்டுங்க..பஸ்சுக்கு போவோம் என்று பிளாஸ்கை வாங்கிக்கொண்டு நடந்தார். கண்ணாயிரம் அவர் பின்னால் இடுப்பை பிடித்தபடி நடந்தார். பஸ்சில் இருவரும் ஏறியபோது அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை திகைக்கவைத்தது.
டிரைவர் உள்பட அனைவரும் முககவசம் அணிந்து கண்ணாயிரத்தை முறைத்துப்பார்த்தனர். எப்படி இவர்களுக்கு முககவசம் வந்தது…நம்ம பாக்கெட்டை காலிபண்ணிட்டாங்களா…அதிலே கொஞ்சம்தானே இரூந்துச்சு…அவங்களாவே வாங்கியிருப்பாங்களோ என்று நினைத்துகொண்டார். சரி..நமக்கு எதுக்கு வம்பு..என்றவாறு கண்ணாயிரம் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார். பூங்கொடியும் அருகில் சென்று அமர கண்ணாயிரம் அப்பாட…இடுப்பு வலிக்கு என்று நெளிந்தார்.
பூங்கொடி மெல்ல சத்தம்போடாம இருங்க..சின்னப்புள்ளமாதிரி கத்தாதிங்க என்று திட்டினார்.
கண்ணாயிரத்துக்கு மாத்திரை எடுத்துக்கொடுக்க அவர் அதை வாங்கிமுழுங்கினார். பிளாஸ்கை திறந்து வெந்நீரை ஒரு மடக்கு குடித்தார்.ஆ…என்ன சூடு..என்ன சூடு…என்று நாக்கை நீட்டினார்.
இதையெல்லாம் பயில்வான் பார்த்துக்கொண்டே இருந்தார்.என்ன கண்ணாயிரம்.. எல்லாம் வாங்கியாச்சா..புறப்படலாமா என்க கண்ணாயிரம் முககவசத்தை லேசா உயர்த்திவிட்டு ..சரி போகலாம் என்க..கண்ணாயிரத்தைப்பார்த்து என்ன தொண்டை சரியாயிற்றா…ரைட்டு..என்று பயில்வான் சொல்ல பஸ்புறப்பட்டது.

மழை கொஞ்சம் நின்றிருந்தது. கண்ணாயிரம் இடுப்பு வலித்ததால் ஒத்தடம் கொடுக்குமாறு பூங்கொடியிடம் வற்புறுத்த ..உங்களோடு ஓரே தொந்தரவா போச்சு என்றபடி பிளாஸ்கை வைத்து ஒத்தடம் கொடுக்க சூடு தாங்காமல் கண்ணாயிரம் ஆ என்று கத்தினார். யாரும் கண்டு கொள்ளவில்லை.
பஸ் மின்னல் வேகத்தில் சென்றது.சாத்தூர் அருகே சென்றபோது போலீசார் திடீரென்று சோதனை நடத்த பஸ்சை நிறுத்தி தாவி ஏறினாரார்கள். எல்லோரும் முககவசம் அணிந்து ஒருமாதிரியாக விளிக்க..ஏதோ தொற்றுநோயாக இருக்குமோ…நமக்கெதுக்கடாவம்பு என்றபடி பயந்துபோய் வேகமாக இறங்கினர்.
போட்டு..போட்டு…சீக்கிரம் போட்டு என்று அவசரப்படுத்தி அனுப்பினர்.அவர்களது கையில் கள்ளநோட்டு வாலிபரின் புகைப்படம் சிரித்தது.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.