June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

புதிய டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு “மசோதா- 2022”-மத்திய அரசு வெளியிட்டது

1 min read

New Digital Data Protection “Bill- 2022”- Published by Central Govt

18.11.2022
புதிய டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதா- 2022-ஐ, ஒன்றிய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புதிய டிஜி்ட்டல் டேட்டா

புதிய டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதா- 2022-ஐ, ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இதை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதா 2021 குறித்து, நாடாளுமன்றக் குழு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதில் 81 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்றக் குழு கருத்து தெரிவித்தது. அதையடுத்து அந்த மசோதா நிறுத்திவைக்கப்பட்டு புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, ஐரோப்பா, சிங்கப்பூர் நாடுகளின் சட்டங்கள், அமெரிக்க சட்டத்தின் ஒரு பகுதியை ஆய்வுசெய்து, புதிய மசோதாவின் அம்சங்கள் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *