June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

போலி கையெழுத்திட்டு முறைகேடு; போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு

1 min read

Forgery of signatures; Police have been suspended

20.11.2022
புகார் மனு ஏற்பு ரசீதுகளில் போலி கையெழுத்திட்டு முறைகேட்டில் ஈடுபட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.

போலி கையெழுத்து

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில், புகார் மனு ஏற்பு ரசீதுகளில் போலி கையெழுத்திட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக, தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த செல்வராஜ் என்பவர், பொதுமக்களிடம் புகாரை பெற்றுக் கொண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், மனு ஏற்பு ரசீதுகளில் உதவி ஆய்வாளர்களின் கையெழுத்திட்டு, முறைகேட்டில் ஈடுபட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், செல்வராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *