June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

1 min read

The Jallikattu case will be heard in the Supreme Court tomorrow

23.11.2022
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நாளை வழக்கு விசாரணைக்கு வருகிறது.

ஜல்லிக்கட்டு வழக்கு

ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு இதனை விசாரித்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா, இந்த விவகாரத்தை ஜனவரி மாதத்துக்கு முன் விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
அதேபோல், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த அரசியல் சாசன அமர்வு, விசாரணை நவம்பர் 23ஆம் (இன்று) தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீது இன்று விசாரணைக்கு வர உள்ளது. இன்று வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் நாளை விசாரணை என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை இன்று தாக்கல் செய்தது.அதில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எனவும் தெரிவித்துள்ளது,

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *