June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே மனைவி மகளை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

1 min read

Double life imprisonment for murdering wife and daughter near Tenkasi

28.12.2022
தென்காசி மாவட்டம் சின்ன கோவிலாங்குளம் பகுதியில்
மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

கொலை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தளவாய்புரம் பகுதியில் வசித்து வந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது மனைவி மற்றும் 6 மாத கைக்குழந்தையை கொலை செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சின்ன கோவிலான் குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி வெங்கடேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.. இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இரட்டை ஆயுள் தண்டனை

அதன்படி குற்றவாளியான வெங்கடேசன் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 8 கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும்,2 போக்சோ வழக்கின் குற்றவாளிகளுக்கும்,1 கற்பழிப்பு வழக்கின் குற்றவாளி க்கும் ஆயுள் தண்டனை தென்காசி மாவட்ட காவல் துறையினர் பெற்றுக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *