June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

சொர்க்கவாசல் திறப்பின் போது பத்திரிகை போட்டோ கிராபர் மாரடைப்பால் மரணம்

1 min read

Journalist photographer dies of heart attack during Heaven’s Gate opening

2.1.2023
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவிலில், பத்திரிக்கை புகைப்பட கலைஞர் சீனிவாசன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

சொர்க்கவாசல் திறப்பு

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வெகு விமரிசையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பையொட்டி பாதுகாப்பிற்காக 1,250 போலீசார் சுழற்சி முறையில் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது, இந்து ஆங்கில பத்திரிக்கை புகைப்பட கலைஞர் சீனிவாசன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தார். சொர்க்கவாசல் திறப்பு செய்தி சேகரித்த போது புகைப்பட கலைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *