June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைப்பு

1 min read

AIADMK general committee hearing adjourned for today

5.1.2023
அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்றும் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. வழக்கு

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜனவரி 4-ந் தேதிக்கு (நேற்று) தள்ளிவைக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கின் விசாரணை இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி, வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வைரமுத்து தரப்பில் பரபரப்பு வதங்கள் முன் வைக்கப்பட்டன. குறிப்பாக “அதிமுகவின் அடிப்படை விதிகளையே தற்போது மாற்றி அமைத்துள்ளனர். கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியையும் மாற்றியுள்ளனர். பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும்” போன்ற வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

ஒத்தி வைப்பு

இந்த நிலையில், வழக்கின் விசாரணையை நாளைக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. இரு தரப்பினரும் நாளை வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *