May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் வந்தது

1 min read

Daily corona cases in India fell below 100

23.1.2023
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் வந்தது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,934 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 015- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,735 ஆக உயர்ந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 0.11 ஆகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 0.08 சதவிகிதம் ஆகவும் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 220.28 கோடி டோஸாக உயர்ந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.