May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

நமது பாரம்பரியம் பற்றி, பழங்குடி சமூகம் எனக்கு நிறைய கற்று தந்தது- பிரதமர் மோடி பெருமிதம்

1 min read

Tribal community has taught me a lot about our heritage – PM Modi proud

16.2.2023
நமது பாரம்பரியம் பற்றி, பழங்குடி சமூகம் எனக்கு நிறைய கற்று தந்தது என்று பிரதமர் மோடி பேசினார்.

பழங்குடி மக்கள்

நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பங்காற்றிய பழங்குடி மக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களது நலன்களுக்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி முன்னின்று மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, பழங்குடியினத்தின் கலாசாரங்களை தேசிய அளவில் காட்சிப்படுத்தும் முயற்சியாக, டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கத்தில் இன்று காலை 10.30 மணியளவில் ஆதி மகோத்சவம் என்ற பெயரிலான மெகா தேசிய பழங்குடியின திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பழங்குடி கலாசாரம், கைவினை பொருட்கள், உணவு பொருட்கள், வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியானது மத்திய பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில் இன்று தொடங்கி பிப்ரவரி 27-ந்தேதி வரை நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் 200 ஸ்டால்கள் அமைக்கப்படும். இந்த மகோத்சவத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடியின கலைஞர்கள் பங்கு கொள்கின்றனர். சர்வதேச சிறுதானியங்களுக்கான ஆண்டாக 2023-ம் ஆண்டு கொண்டாடப்படும் சூழலில் பழங்குடியினரால் வளர்த்தெடுக்கப்பட்ட ஸ்ரீ அன்னா சிறுதானியமும் இதில் காட்சிப்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 21-ம் நூற்றாண்டு ஒவ்வொருவருக்கும் ஆதரவு, ஒவ்வொருவருக்கும் வளர்ச்சி என்ற மந்திரத்துடன் நடைபோடுகிறது. ஆதி மகோத்சவம் நிகழ்ச்சி இந்த உள்ளுணர்வின்படி முக்கியத்துவம் பெறுகிறது. ஆதிவாசிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான தேவையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பது உறுதி செய்யப்படுவதற்கான தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என கூறியுள்ளார்.
ஆதி மகோத்சவம் போன்ற பழங்குடி சமூகத்துடன் தொடர்புடைய 8 முதல் 9 நிகழ்ச்சிகள் நாட்டின் பிரசாரத்தில் ஒன்றாக மாறி விட்டது. இதுபோன்ற பல நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாகவே நான் மாறி விட்டேன். பழங்குடி சமூக வளர்ச்சி மற்றும் நலன் என்பது எனது சொந்த மற்றும் உணர்வு சார்ந்த விவகாரமும் ஆகிவிட்டது என பேசியுள்ளார். குஜராத்திலும் ஆதிவாசி சகோதர, சகோதரிகளுக்கு சேவை செய்திருக்கிறேன் என கூறிய அவர், நமது கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்டவை பற்றி பழங்குடி சமூகத்தின் வாழ்க்கை முறை எனக்கு நிறைய கற்று தந்துள்ளது. அவர்களது பொருட்கள் சந்தையில் அதிகம் சென்றுசேர வேண்டும். அவர்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கப்பட வேண்டும். அவர்களது பொருட்களின் தேவை அதிகரிக்கப்பட வேண்டும். அதனை நோக்கி இந்த அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது என கூறியுள்ளார்.
நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, வனம் சார்ந்த பொருட்களுக்கான வளர்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வனம் சார்ந்த 90 சிறிய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையையும் அரசு வழங்கி வருகிறது என கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.