June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கையை விசாரிக்க குழு- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

1 min read

Committee to inquire into Hindenburg report on Adani- Supreme Court order

17.2.2023
அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

அதானி குழுமம்

அதானி குழுமம் மீதான அமெரிக்க நிறுவனம் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 2 பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு பரிந்துரைத்த நிபுணர் குழுவை நியமித்தால் அந்த குழு அரசு நியமித்தத்தாகவே கருதப்பட நேரிடும். அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டுமெனில் சுப்ரீம் கோர்ட்டே நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்தார்.
நிபுணர்களின் பெயர்களை மத்திய அரசு சீல் வைத்த கவரில் வழங்கினால் நாங்கள் ஏற்கமாட்டோம் என கூறினார்.
மேலும் அரசு பரிந்துரைத்த நிபுணர் குழுவை நியமித்தால் அந்த குழு அரசு நியமித்தத்தாகவே கருதப்பட நேரிடும் என்று நீதிபதி தெரிவித்தார். அதானி – ஹிண்டென்பர்க் அறிக்கை குறித்த விவகாரத்தில் குழு அமைப்பது தொடர்பாக உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது .

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *