June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

ராகுல்காந்தி இம்மாத இறுதியில் இங்கிலாந்து பயணம்

1 min read

Rahul Gandhi will visit England at the end of this month

17.2.2023
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இம்மாத இறுதியில் இங்கிலாந்து செல்கிறார்.

ராகுல்காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இம்மாத இறுதியில் இங்கிலாந்து ெசல்கிறார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வணிக கல்லூரியில் உரையாற்றுகிறார். அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ”நான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு சென்று உரையாற்ற ஆர்வமாக இருக்கிறேன். புவி அரசியல், சர்வதேச உறவுகள், ஜனநாயகம் ஆகிய அம்சங்களில் சிறந்து விளங்குபவர்களை சந்திக்க போவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *