June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

1 min read

Woman dies after falling from government bus near Tenkasi

13.5.2024
தென்காசி மாவட்டம் சீவநல்லூர் பகுதியில் அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் தவறி விழுந்து பலியானார்.

தென்காசி அருகே உள்ள சீவநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மனைவி பாலாமணி (வயது 82) இவர் நேற்று செங்கோட்டையில் இருந்து சீவநல்லூருக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தார். சீவநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்றபோது பஸ்ஸில் இருந்து கீழே இறங்கிய பாலாமணி தவறி கீழே விழுந்து உளளார். இதை கவனிக்காத டிரைவர் சந்திரசேகரன் பேருந்தை இயக்கி உளளார்.

இதனால் பாலாமணி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *