June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

பேடிஎம் சேவையை மேலும் எளிதாக்க வசதி- பேமென்ட் பெயிலருக்கு வாய்ப்பே இல்லை

1 min read

Facilitation to make Paytm service even easier – Payment bailer has no choice

3.3.2023
பேடிஎம் சேவையை மேலும் எளிதாக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பேமென்ட் பெயிலருக்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்,

டிஜி்ட்டல் பண பரிவர்த்தனை

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பேடிஎம் நிறுவனம், மின்னணு பணப் பரிவர்த்தனை சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களுள் முக்கிய இடம் வகித்து வருகிறது. சிறிய பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை தற்போது பேடிஎம் மூலம் பணபரிவர்த்தனை செய்யும் வசதி உள்ளது.
இந்தியாவில் கோடிக்கணக்கானோர் இதுபோன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆப்களை பயன்படுத்தி வருகிறார்கள். பேடிஎம் பண பரிவர்த்தனையில் மூலம் சுலபமாக வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும் வசதி, விமான டிக்கெட், ரெயில் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவற்றுக்கு கட்டணம் செலுத்தும் வசதி, செல்போன், டி.டி.எச். போன்றவற்றை ரீசார்ஜ் செய்யும் வசதி போன்ற பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்க பேடிஎம் நிறுவனம், (UPI Lite Feature) எனும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பணம் செலுத்துவதில் ஏற்படும் சிக்கல், மற்றும் பேமென்ட் பெயிலர் ஆகாமல் பண பரிவர்த்தனை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இது தவிர யு.பி.ஐ பின் இல்லாமல், 200 ரூபாய் வரை, உடனடி பேமென்ட் செய்யலாம் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மட்டுமல்ல, யு.பி.ஐ லைட் பேலன்ஸ்-ல் ஆயிரம் ரூபாய் கூடுதலாக சேர்த்தால், கேஷ் பேக் கிடைக்கும் என பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *