மோசடி புகார் தொடர்பாக லாலு பிரசாத் யாதவிடம் சிபிஐ விசாரணை
1 min read
CBI probes Lalu Prasad Yadav on fraud complaint
7.3.2023
மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
லாலு பிரசாத் யாதவ்
கடந்த, 2004 -2009 காலகட்டத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது பிள்ளைகளிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று (மார்ச் 6) விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்றும் லாலு பிரசாத் யாதவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். லாலு யாதவ் விசாரணையின் போது மருத்துவ நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு சிபிஐ அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.