June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கியுடன் பறந்து வந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது

1 min read

The Border Security Force shot down a gun-toting drone from Pakistan

10.3.2023
பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கியுடன் பறந்து வந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது.

டிரோன்

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டாரில் உள்ள, இந்தியா -பாகிஸ்தான் சர்வதேச எல்லையோர பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லை பகுதியை நோக்கி ஒரு டிரோன் பறந்து வந்ததை கவனித்தனர். உஷாரான எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், அந்த டிரோனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து டிரோன் பாகிஸ்தான் நோக்கி திரும்பிச் சென்றது.
ஆனால் அதற்குள் டிரோன் விழுந்துவிட்டது. நபி நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து அந்த டிரோனை கைப்பற்றினர். 6 இறக்கைகளுடன் கூடிய அந்த டிரோனில் ஒரு ஏகே ரக துப்பாக்கி, 2 மேகசின்கள் மற்றும் 40 ரவுண்டு சுடக்கூடிய புல்லட்டுகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *