June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடி மத்திய படைக்கு வாழ்த்து

1 min read

Prime Minister Modi congratulates the Central Army

10.3.2023
மத்திய தொழில் பாதுகாப்புப் படை 54-வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடியது. நாட்டின் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பங்கு மகத்தானது. மத்திய அரசின் ஆயுத படைகளில் ஒன்றான சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை கடந்த 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இன்று மத்திய தொழில் பாதுகாப்புப் படை 54-வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடியது. இதையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், ‘அவர் நாட்டின் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பங்கு மகத்தானது. இந்த படையினர் நாட்டின் முக்கிய பணிகளில் உள் கட்டமைப்பு பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் செயல்படுகிறார்கள். அவர்களது கடின உழைப்பை போற்ற வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *