May 27, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே மயிலப்பபுரத்தில் 700 பேருக்கு நலத்திட்ட உதவி- திமுக மாவட்ட செயலாளர் வழங்கினார்

1 min read

DMK district secretary provided welfare assistance to 700 people in Mayilappapuram near Kadayam

28.3.2023
கடையம் அருகே மயிலப்பபுரத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் 700 பேருக்கு நலத்திட்ட உதவிகளை திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் வழங்கினார். வழங்கினார்

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்

தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த தின விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெங்காடம்பட்டி ஊராட்சி மயிலப்பபுரத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியக்குழு துணை தலைவருமான மகேஷ் மாயவன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் ரவி, துணைசெயலாளர் பிரமநாயகம், பொருளாளர் அஜிஸ்,மாவட்ட பிரதிநிதி மதிவாணன்,அட்மா சேர்மன் குணசீலன், வெங்கடாம்பட்டி பஞ்.தலைவர் ஸாருகலா ரவி , முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் குமார்,ராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி ரவி சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியை கிளைசெயலாளர் சுப்பிரமணியன்,கவுன்சிலர் சங்கர் தொகுத்து வழங்கினர்.

நலத்திட்ட உதவிகள்

இந்த விழாவில் தென்காசி தெற்கு
மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு 700 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமை கழக பேச்சாளர்கள் புதுக்கோட்டை விஜயா மற்றும் உடன்குடி தனபால் ஆகியோர் உரையாற்றினார்கள்.

திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அருள்,ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் க.சீனித்துரை, சிவன்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவுடை கோமதி, ரம்யா அஞ்சான் கட்டளை பஞ்சாயத்து துணை தலைவர் சுதன், ஆழ்வார்குறிச்சி பேரூர் கவுன்சிலர் சந்திரன், மாவட்ட பிரதிநிதி யாகூப், சிறுபான்மை அணி சுபேர், வார்டு உறுப்பினர் சங்கர் ராம், வெங்கடாம்பட்டி ஊராட்சி கிளை செயலாளர்கள் ஜெயராஜ், திருபாற்கடல்,முத்து,ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் மேசியா அற்புதராஜ்,லெட்சுமணன்,நவாஸ்கான்,கண்ணன்,இராஜபாண்டி, கானா முருகன், செல்வராஜ், அலி, பணிசேவியர்,கபடி மகேஷ், ராஜேஷ், தளபதி மணி,ராஜ சிவ கணேஷ், வழக்கறிஞர் காமாட்சி தேவ், முத்துராஜ்,மகா ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தெற்கு மயிலப்புரம் திமுக கிளைச் செயலாளர் தங்கராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.

-முத்துசாமி, தென்காசி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.