June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 8-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு

1 min read

Tamil Nadu may receive rain till 8th

4.4.2023
தமிழகத்தில் 8-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும். 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *