June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலநாதர் கோவிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றம்

1 min read

Chitrai Vishu Festival Flag Hoisting at Courtalanathar Temple

6.4.2023

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கணேச பட்டர் தலைமையில் ஓதுவார் சங்கரநாராயணன் முன்னிலையில் ஜெயமணி சுந்தரம் பட்டர் பிச்சுமணி என்ற கண்ணன் பட்டர் மகேஷ் பட்டர் ஆகியோர் சிவபூத கனவாத்தியங்கள் முழங்க கொடி ஏற்றி சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர் முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கொடியேற்று விழாவில் உதவி ஆணையாளர் கண்ணதாசன் திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இளஞ்சி அன்னையா பாண்டியன் முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், குற்றாலம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் கிருஷ்ணராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சித்திரைவிசுதிருவிழா வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி -அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சித்திரை விசு திருவிழாவின் ஐந்தாம் நாளான 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் நான்கு தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன. வருகிற 11-ந் தேதி காலை 9-30 மணி மற்றும் இரவு 7 மணிக்கு நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 12-ந் தேதி சித்திர சபையில் காலை 10 மணிக்கு நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது. 14-ந் தேதி சித்திரை விசு தீர்த்தவாரி காலை 9-20 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

குற்றாலம் திரு குற்றாலநாதர் கோவில் சித்திரை விசு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையாளர்கள் கவிதா, கண்ணதாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
One attachment
• Scanned by Gmail

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *