புளியரையில் கனிமவளம் ஏற்றிய லாரிகளில் போலீசார் சோதனை
1 min read
Police raid trucks loaded with minerals in Puliyarai
6.4.2023
புளியரையில் கனிமவளம் ஏற்றிய லாரிகளில் போலீசார் சோதனை நடந்தது.
கனிம வளங்கள்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக-கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் புளியரை சோதனைச்சாவடி வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் அதிக பாரம் ஏற்றி செல்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு சட்டசபையில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும் முன்னாள் தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ரவி அருணன் தலைமையில் கடையம், தென்காசியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதனை அடுத்து புளியரை சோதனை சாவடியில் கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் லாரிகளை நிறுத்தி போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர் . அளவுக்கு அதிகமான ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் இன்று 2-வது நாளாக புளியரை சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதனால் கனிம வளங்கள் ஏற்றி சென்ற வாகனங்கள் புளியரை முதல் கணையம் சாலை ஓரங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
-தகவல் முத்துசாமி, தென்காசி