ஜார்க்கண்ட் கல்வித்துறை மந்திரி சென்னையில் மரணம்
1 min read
Jharkhand education minister dies in Chennai
6.4.2023
சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜார்க்கண்ட் கல்வித்துறை மந்திரி மரணம் அடைந்தார்
கொரோனா
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் மாநில கல்வித்துறை மந்திரி ஜகர்நாத் மகதோ சென்னையில் உள்ள மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். கொரோனானால் பாதிக்கப்பட்ட ஜெகர்நாத்துக்கு கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யபப்ட்டது.
இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை பூரணமாக குணமடையவில்லை. கடந்த மாதம் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மகதோ மறைவுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.