சிறுபான்மையினருக்கு பல திட்டங்களை செயல்படுத்தியது தி.மு.க அரசு – மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min read
DMK Govt Implemented Many Schemes For Minorities – MGA Stalin’s Speech
14.4.2023
கோரிக்கை வைக்காமலேயே சிறுபான்மையினருக்கு பல திட்டங்களை செயல்படுத்தியது தி.மு.க அரசு என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
ரம்ஜான் நோன்பு
சென்னை நீலாங்கரையில் தி.மு.க. சார்பில் புனித ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
இஸ்லாமிய மக்களுக்கு எனது ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மத வேறுபாடு இல்லாமல் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திட்டங்கள்
திராவிட முன்னேற்ற கழகம் எப்பொழுது ஆட்சியில் வந்ததோ, அப்போது இஸ்லாமிய சமுதாயத்திற்காக பல்வேறு திட்டங்கள், சாதனைகள் உருவாக்கி தரப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு திட்டங்களை கொண்டுவந்தது தி.மு.க. அரசு. முதல் முறை ஆட்சிக்கு வந்தவுடன் மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர். அதன்பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சி அதனை ரத்துசெய்தது. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் மிலாது நபிக்கு அரசு விடுமுறை கொண்டுவரப்பட்டது. கோரிக்கை வைக்காமலேயே சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது
தி.மு.க. அரசு. கோரிக்கை வைக்காமலே செய்யும் அரசு, கோரிக்கை வைத்தால் செய்யாமல் இருக்குமா? அனைத்தையும் உள்ளடக்கிய அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.