ஐதராபாத்தில் இந்தியாவிலேயே உயரமான 125 அடி உயர அம்பேத்கர் சிலை- சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்
1 min read
ndia’s tallest 125 feet statue of Ambedkar in Hyderabad – Chandrasekhara Rao inaugurated
14.4.2023
இந்தியாவிலேயே உயரமான 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதல் மந்திரி சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்.
அம்பேத்கர் சிலை
ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளையொட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அம்பேத்கர் சிலையை நேற்று மதியம் 2 மணியளவில் திறந்து வைத்தார். இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்டு சுற்றுலா நலமாக மாற்றப்பட உள்ளது. ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஸ்தூபியை நிர்மாணித்த பிறகு, சிலையின் பாகங்கள் டெல்லியில் தயாரிக்கப்பட்டு ஐதராபாத்திற்கு கொண்டுவரப்பட்டன. கனரக கிரேன்களின் உதவியுடன் அவை முறையாக நிறுவப்பட்டுள்ளன. இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் வலிமையான உலோகப் பொருட்கள் கொண்டு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
லிப்ட்கள்
சிலையின் அடிப்பாகத்தில் இருந்து, சிலையை முழுவதுமாக கண்டுக்களிக்க படிக்கட்டு மற்றும் சாய்வுதளத்துடன் 15 பேர் அமரக்கூடிய 2 லிப்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைக்கப்படுகிறது.நூலகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வைக்கப்பட உள்ளது. சிலையின் கீழ், தூணில் உள்ள நினைவு கட்டிடத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் வாழ்க்கை தொடர்பான முக்கிய நிகழ்வுகள் அடங்கிய அருங்காட்சியகம் மற்றும் புகைப்படத் தொகுப்பு இங்கு நிறுவப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்ளே ஆடியோ காட்சி அறைகள் உள்ளன. நினைவிடத்திற்கு வெளியே பசுமைக்காக. 2.33 ஏக்கர் காலி நிலம். ராக் கார்டன், லேண்ட்ஸ்கேப்பிங், தோட்டம், நீர் ஊற்று உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 450 கார்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
திறப்பு விழா நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.