June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பதியில் நடைபாதை இலவச தரிசன டிக்கெட் வழங்கும் இடம் மாற்றம்

1 min read

Tirupati Pavement Free Darshan Tickets Change Location

14/4/2023
திருப்பதியில் நடைபாதை இலவச தரிசன டிக்கெட் வழங்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

திருப்பதி

திருப்பதியில் ஏழுமலையான தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள், நேர ஒதுக்கீடு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் நடைபாதையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கும் இலவச நேர ஒதுக்கிட்டு டிக்கெட் வழங்க வேண்டுமென பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தான அதிகாரிகள் 2,083-வது படியில் காளி கோபுரம் அருகே அலுவலகம் அமைத்து தரிசன டிக்கெட் வழங்கி வந்தனர். தினமும் அதிகாரிகள் நடந்து சென்று டிக்கெட் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது.

இதையடுத்து அலிப்பிரியில் நடைபாதை இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் அலுவலகம் அமைத்து நேற்று காலை முதல் பக்தர்களுக்கு டிக்கெட்டுகளை வழங்கி வருகின்றனர். இலவச தரிசன டிக்கெட் பெற்று செல்லும் பக்தர்கள் 1,240-வது படி அருகே அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்து கொண்டு நேர ஒதுக்கீடு பெற்று தரிசனத்திற்கு செல்ல வேண்டுமென தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பக்தர்கள் இந்த வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப திருமலை யாத்திரையை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

முடிகாணிக்கை

திருப்பதியில் நேற்றுமுன்தினம் 67,687 பேர் தரிசனம் செய்தனர். 25,090 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.95 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *