July 31, 2026

Seithi Saral

Tamil News Channel

பரமக்குடி அரசு கல்லூரியில் மாணவரை சாதியை சொல்லி திட்டி தாக்கிய 2 பேராசிரியர்கள், 7 மாணவர்கள் மீது வழக்கு.

1 min read

A case has been filed against 2 professors and 7 students of Paramakkudy Government College who insulted students by calling them caste.

15.4.2023
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்துறையில் இரண்டாம் ஆண்டு18 வயது மாணவர் படித்து வருகிறார். சம்பவ நாளான கடந்த 13 ம்தேதி கல்லூரி ஆண்டு விழா நடந்தது. அதுசமயம் அம் மாணவர் எழுந்து சென்றபோது ஆங்கில துறை பேராசிரியர் ஜேசுதாஸ் எங்கே செல்கிறாய் என மாணவரை கேட்டதற்கு மாணவர் தண்ணீர் குடிக்க செல்வதாக கூறியுள்ளார்.
அதற்கு பேராசிரியர் மாணவரை ஜாதியை சொல்லியும், தகாத வார்த்தைகளாலும் திட்டியதுடன் கைகளால் தாக்கியதில் காயங்கள் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் மாணவரை நூலகத்திற்கு அழைத்து சென்று அங்கு நூலக பொறுப்பாசிரியரும் ஆங்கில பேராசிரியர் செல்லத்துரையும் மாணவரை சேர்ந்து அடித்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பி வெளியில் வரும்போது முன்னாள் மாணவர் மற்றும் மாணவர்கள் 6 பேர் சேர்ந்து எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியரை எதிர்த்தா பேசுகிறாய் என கூறி மாணவரை நெஞ்சில் மிதித்து ஜாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மாணவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.கல்லூரி வளாகத்தினுள் நடந்த இச்சம்பவம் பரமக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மாணவர் கொடுத்த புகாரின் பேரின் பரமக்குடி நகர் காவல் துறையினர் கல்லூரி பேராசிரியர்கள் ஜேசுதாஸ், செல்லத்துரை மற்றும் 7 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து பரமக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் காந்தி விசாரணை செய்து வருகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *