June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

நண்பர்களிடம் மன்னிப்பு கோரிய அண்ணாமலை

1 min read

Annamalai apologized to friends

15.4.2023
“நான் வெளியிட்ட வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், நண்பர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்றும், தனது ரஃபேல் வாட்ச் தொடர்பான விவரங்கள் என்றும் சில தகவல்களை www.enmannenmakkal.com என்ற வலைதளம் வாயிலாக அண்ணாமலை நேற்று வெளியிட்டார். இந்நிலையில், இது தொடர்பாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஏப்ரல்14-ம் தினமான நேற்று, நான் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் ரசீது, எனது வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு மற்றும் கல்விக் கடன் விவரங்களுடன் திமுகவினரால் குவிக்கப்பட்டுள்ள சொத்துகளின் விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டிருந்தேன். அவற்றின் விவரங்கள் https://enmannenmakkal.com என்கிற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துள்ளது என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். எனது செயல்களுக்குப் பின்னால் உள்ள நியாயமான காரணங்களை விளக்கி, என் நண்பர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *